காசாவில் நிலவும் உணவு, குடிநீர் பஞ்சம்  இஸ்ரேலின்... ... 10ம் நாளாக தொடரும் போர்: ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்
x
Daily Thanthi 2023-10-15 22:46:08.0
t-max-icont-min-icon

காசாவில் நிலவும் உணவு, குடிநீர் பஞ்சம்

இஸ்ரேலின் தாக்குதலால் உயிர் பயத்தில் நடுங்கி வரும் காசா மக்கள் மறுபுறம் உணவு, குடிநீர் பஞ்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பினாலும் உணவு கிடைக்காமல் மக்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவுவதாக மனிதநேய ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதே சமயம் காசாவில் பிணை கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்கும் வரை காசாவுக்கான எந்த வினியோகத்தையும் தொடங்க மாட்டோம் என இஸ்ரேல் பிடிவாதமாக உள்ளது.

இதனிடையே இஸ்ரேலின் தாக்குதலில் படுகாயம் அடைந்து ஒவ்வொரு மணிநேரமும் நூற்றுக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவதால் காசாவில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன. அதே வேளையில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காமல் அல்லல்படும் அவலநிலைக்கு ஆஸ்பத்திரிகள் தள்ளப்பட்டுள்ளன.


Next Story