பூமியின் நரகமாக மாறும் காசா: மும்முனை... ... 10ம் நாளாக தொடரும் போர்: ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்
x
Daily Thanthi 2023-10-15 22:36:48.0
t-max-icont-min-icon

பூமியின் நரகமாக மாறும் காசா: மும்முனை தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 2-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இருதரப்புக்கும் இடையே நடந்த முந்தைய போர்களை விடவும் இந்த போர் அபாயகரமானதாக மாறி வருகிறது.

அதற்கு எடுத்துக்காட்டாக காசாவின் தற்போதைய நிலைமையை சொல்லலாம். பூமியின் நரகம் என்றும் சொல்லும் அளவுக்கு அந்த நகரம் மிகவும் மோசமான சூழலை எதிர்கொண்டு வருகிறது.

அங்கு ஒரு நிமிட இடைவெளி கூட இல்லாமல் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசிய வண்ணம் உள்ளன. இதனால் அங்கு 24 மணி நேரமும் குண்டு சத்தம் விண்ணை பிளக்கிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் இடைவிடாத குண்டு மழையால் காசாவில் இருக்கும் கட்டிடங்கள் தரைமட்டமாகி வருகின்றன. இதனால் காசாவில் எங்கு பார்த்தாலும் கான்கிரீட் குவியலாக காட்சியளிக்கின்றன.


Next Story