விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில்... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..
x
Daily Thanthi 2024-12-09 05:53:40.0
t-max-icont-min-icon

விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் போராட்டத்தால் விழுப்புரம் - சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

 வடக்கு தெரு, மாசிலாமணிப்பேட்டை, மேல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story