தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை  விடுதலை... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..
x
Daily Thanthi 2024-12-09 03:53:16.0
t-max-icont-min-icon

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சந்திக்க உள்ளார். பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விசிக சார்பில் ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என திருமாவளவன் அறிவித்து இருந்தார். இந்த நிவாரண நிதியை அளிக்க திருமாவளவன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, அரசியலில் புயலை கிளப்பியுள்ள ஆதவ் அர்ஜுனா விவகாரம் தொடர்பாக ஸ்டாலினிடம் திருமாவளவன் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story