சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருதும், ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்படும்


சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருதும், ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்படும்
x
Daily Thanthi 2023-03-21 05:22:55.0
t-max-icont-min-icon

“சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருதும், ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்படும்” - வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

"விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க ஆண்டு கட்டணமாக ரூ. 10,000 மானியத்தொகை அறிவிக்கப்படும் இதற்காக ரூ.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு"

"அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்" இந்த விருதுடன் ரூ.5 லட்ச பணமும், பாராட்டு பத்திரமும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்"

"வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும்"

"வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்"

"சூரியகாந்தி பயிர் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு"

"விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ்ஆப் குழு"


Next Story