"கம்பு, கேள்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு
2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
"நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும்"
"2,504 கிராமங்களில் ரூ.230 கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்"
"சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும்; ரூ.82 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்"
"மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம், தங்க சம்பா சாப்பிட்டா தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
எல்லாருக்கும் கொடுங்க சாப்பிட தயாராக உள்ளனர் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
"வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு"
"கம்பு, கேள்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு"