வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்காததை கண்டித்து... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2024-04-19 11:02:46.0
t-max-icont-min-icon

 வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்காததை கண்டித்து பல்லடம் தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த வாக்குச்சாவடியை பார்வையிட பல்லடம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராஜ் வந்துள்ளார். அப்போது எம்.எல்.ஏ. செல்வராஜ் வாக்குச்சாவடிக்குல் செல்ல வெளிமாநில போலீசார் அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் அட்டையை காண்பித்தும் வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், எம்.எல்.ஏ. செல்வராஜ் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story