ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன்... ... 4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 63.04 சதவீத வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2024-05-13 02:56:47.0
t-max-icont-min-icon

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடப்பாவில் உள்ள புலிவேந்தலா வாக்குச்சாவடியில் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:- கடந்த 5 ஆண்டுகளாக ஒரு ஆட்சியை நீங்கள் பார்த்துள்ளீர்கள். இந்த ஆட்சி நிர்வாகத்தின் மூலம் பயன்பெற்றதாக நீங்கள் கருதினால், உங்களின் எதிர்காலத்தை வளமாக்கும் ஆட்சி நிர்வாகத்திற்காக வாக்களியுங்கள்” என்று கூறினார். 


Next Story