போரில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி... ... 23வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 9 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
x
Daily Thanthi 2023-10-28 23:31:10.0
t-max-icont-min-icon

போரில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது - ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல்

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுடனான போர் தொடங்கியதில் இருந்து 8,000க்கும் அதிகமானோர் பாலஸ்தீனப் பகுதியில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆளும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் இன்று அதிகாலை தெரிவித்தது.

இதன்படி இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் இறப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது என்றும், அவர்களில் பாதி குழந்தைகள் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று அதிகாலை வெளியிடப்பட்ட கடைசி உயிரிழப்பு எண்ணிக்கையில் 7,703 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 


Next Story