பிணைக்கைதிகள்:-  இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த 7ம்... ... ஹமாசின் டிரோன் தாக்குதல் முறியடிப்பு - இஸ்ரேல் ராணுவம் தகவல்
Daily Thanthi 2023-10-23 11:51:52.0
t-max-icont-min-icon

பிணைக்கைதிகள்:-

இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலின் போது பலரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசாவுக்குள் கொண்டு சென்றனர். பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் வசம் 222 பேர் பிணைக்கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story