மத்திய கிழக்கு மோதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில், தாக்குதல் நடத்த அமெரிக்கா தயங்காது - லாயிட் ஆஸ்டின்
அமெரிக்க ராணுவத்தின் டெல்டா வீரர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக், குவைத், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ரகசிய ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். அதே போல் காசாவிலும் டெல்டா வீரர்கள் ரகசிய ராணுவ நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும், இதற்காக இஸ்ரேலில் சுமார் 13,000 அமெரிக்க வீரர்கள் முகாமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தரப்பு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அதே சமயம் போரில் ஹமாசுக்கு ஆதரவாக ஈரான், லெபனான், சிரியா என பல நாடுகள் செயல்பட தொடங்கியுள்ள நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்க உதவிகள் நீண்டு கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் மிகவும் சக்திவாய்ந்த ‘தாட்' எனப்படும் ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்பை மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்புவதாக அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.