2 அமெரிக்க பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ்  டெல்... ... லைவ்: 16வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது...!
x
Daily Thanthi 2023-10-21 20:36:12.0
t-max-icont-min-icon

2 அமெரிக்க பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ்

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், எல்லையில் உள்ள வேலிகளை உடைத்துகொண்டு இஸ்ரேலின் தெற்கு நகரங்களுக்குள் ஊடுருவினர்.

அங்கு நூற்றுக்கணக்கானோரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் அமைப்பினர் பெண்கள், சிறுவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணை கைதிகளாக பிடித்து, காசா பகுதிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் வெளிநாட்டினரும் அடங்குவர்.

இந்த நிலையில் தங்களது பிடியில் இருந்த அமெரிக்க பெண்கள் இருவரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று முன்தினம் விடுவித்தனர். காசா எல்லையில் விடுவிக்கப்பட்ட இருவரையும் இஸ்ரேல் ராணுவம் மீட்டு பாதுகாப்பாக இஸ்ரேலுக்குள் அழைத்து சென்றது.

விடுமுறையை கொண்டாட இஸ்ரேலுக்கு சென்ற அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ரானன் ஆகிய இருவரும் கடந்த 7-ந்தேதி தெற்கு இஸ்ரேல் பகுதிக்கு சென்றபோது ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கினர்.

தாய், மகள் இருவரும் தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்களை பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை இஸ்ரேல் செய்து வருகிறது.

இதனிடையே விடுவிக்கப்பட்ட அமெரிக்கர்கள் இருவரிடமும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் பேசி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


Next Story