காசாவில் மற்றொரு ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்த... ... லைவ்: 16வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது...!
x
Daily Thanthi 2023-10-21 19:27:49.0
t-max-icont-min-icon

காசாவில் மற்றொரு ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காசாவில் உள்ள ஆஸ்பத்திரி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டி எச்சரித்துள்ளது.

வடக்கு காசாவில் உள்ள அல்-குவாத் ஆஸ்பத்திரி. இங்கு சுமார் 400 நோயாளிகளும், உயிருக்கு பயந்து தஞ்சமடைந்திருக்கும் பொதுமக்கள் 12,000 ஆயிரம் பேரும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆஸ்பத்திரி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த இருப்பதாகவும், எனவே அங்கிருக்கும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறும் பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டி அவசர அழைப்பு விடுத்துள்ளது. எனினும் இது குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதனிடையே காசாவில் உள்ள பழமையான தேவாலயம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் தனது உறவினர்கள் பலர் பலியானதாக அமெரிக்காவின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜஸ்டின் அமாஷ் தெரிவித்துள்ளார்.


Next Story