மேற்குகரையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சோதனை: ... ... லைவ்:  - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
x
Daily Thanthi 2023-10-14 07:58:11.0
t-max-icont-min-icon

மேற்குகரையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சோதனை:

பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஜெனின், நப்லஸ், ஜெரிகொ ஆகிய நகரங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் இந்த சோதனை நடைபெற்றது. ஜெரிகொ பகுதியில் நடந்த சோதனையின் போது பாலஸ்தீனிய இளைஞர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு இஸ்ரேல் பாதுகாப்புப்படை கொடுத்த பதிலடி தாக்குதலில் பாலஸ்தீன இளைஞர் உயிரிழந்தார். மேற்குகரையில் இஸ்ரேல் நடத்திய சோதனையில் இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Next Story