இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - ஹமாஸ்... ... இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்
Daily Thanthi 2024-10-01 21:06:37.0

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - ஹமாஸ் வரவேற்பு

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை ஹமாஸ் ஆயுதக்குழு வரவேற்றுள்ளது. காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை ஹமாஸ் வரவேற்றுள்ளது. 


Next Story