அரியானா முதல்-மந்திரியும், லட்வா தொகுதியின் பாஜக... ... அரியானா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
x
Daily Thanthi 2024-10-05 10:26:52.0
t-max-icont-min-icon

அரியானா முதல்-மந்திரியும், லட்வா தொகுதியின் பாஜக வேட்பாளருமான நயாப் சிங் சைனி, லட்வாவில் உள்ள குருத்வாராவில் பிரார்த்தனை செய்தார். இங்குள்ள வாக்குச்சாவடியில் உள்ள பாஜக உதவி மையத்தையும் அவர் பார்வையிட்டார்

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயாப் சிங் சைனி, "நாங்கள் நிறைய அன்பைப் பெறுகிறோம், மாநிலம் முழுவதும் தாமரை மலரும், லட்வாவிலும் தாமரை மலரும். காங்கிரசின் பாகுபாடு அரசியலை நாங்கள் முடித்துவிட்டோம். ஹூடா ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மட்டுமே பார்க்கிறார், ஆனால் எங்கள் அரசாங்கத்தில், நாங்கள் சப்கா சாத், சப்கா விகாஸ், அனைவரையும் அழைத்துச் சென்றுள்ளோம். 7 தலைமுறை காங்கிரசால் கூட இவ்வளவு வேலை செய்ய முடியாது என்று தெரிவித்தார்.



Next Story