பழமையும், நவீனமும் இணைந்த ராமர் கோவில்  அயோத்தி... ... ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
x
Daily Thanthi 2024-01-21 23:04:45.0
t-max-icont-min-icon

பழமையும், நவீனமும் இணைந்த ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள இடம், சரயு நதிக்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. சரயு நதி என்பது கங்கையை போல் பரந்து விரிந்து செல்லும் மிகப்பெரும் ஆறு. எனவே அதன் கரையில் கோவில் கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. அதுமட்டுமின்றி பூலோக ரீதியாக அங்கிருந்து நேபாளம் சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

எனவே நிலநடுக்கம், ஆற்று வெள்ளம் என அனைத்தையும் தாங்கி கோவில் பல நூற்றாண்டுகள் நிலைத்து இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. எனவே பழங்கால முறைப்படி கற்களை கொண்டே ஆழமான அஸ்திவாரத்துடன் இரும்பு போன்ற உலோக பயன்பாடு இல்லாமல் கோவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

கோவில் கட்டிட வடிவமைப்பாளர் சோமபுரா கூறும்போது, ராமர் கோவில் பழங்கால முறைப்படி கட்டப்பட்டுள்ள நவீன கோவில் என்றார்.


Next Story