ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்:... ... ஜி20 உச்சி மாநாடு: பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது- பிரதமர் மோடி
x
Daily Thanthi 2023-09-08 17:41:52.0
t-max-icont-min-icon

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

புதுடெல்லி,

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ள அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது இருதரப்பு சந்திப்பின் போது, சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராகும் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

முன்னதாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதனிடையே, ஜோ பைடனை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும்.” என்று அதில் தெரிவித்திருந்தார்.  


Next Story