பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்


பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்
x
Daily Thanthi 2023-02-01 06:22:54.0
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறதில் அதில்,

*அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்

* 38,800 ஆசிரியர்கள் புதியதாக பணிக்கு எடுக்கப்படுவார்கள், ஏகலைவா பள்ளிக்கூடம் அதிக அளவில் மேம்படுத்தப்படும்"

*என்.ஜி.ஓ க்களுடன் இணைந்து டிஜிட்டல் நூலகத்தை வலுவுடன் கட்டமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

*ரூ. 15,000 கோடி அடுத்த 3 ஆண்டுகளில் இலக்கு நிர்ணயித்து பழங்குடியினருக்கு திறன் மேம்படுத்தும் பயிற்சி வழங்கப்படும்.

*கர்நாடக மாநில விவசாயிகளுக்கான சிறப்பு திட்டம் அறிவிப்பு;

*கர்நாடகாவிற்கு ரூ. 300 கோடி வறட்சிக்கான நிதி ஒதுக்கீடு. கர்நாடக மாநில பாசன திட்டத்துக்கு ரூ. 5300 கோடி ஒதுக்கீடு"

*நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுன்னறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்

*இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ₹7000 கோடி ஒதுக்கீடு

* கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்


Next Story