நிவாரணப் பொருள்களுடன் ரபா எல்லையில் காத்திருக்கும்... ... 15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!
x
Daily Thanthi 2023-10-20 22:50:19.0

நிவாரணப் பொருள்களுடன் ரபா எல்லையில் காத்திருக்கும் 200 லாரிகள்

இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களில் காசாவில் இதுவரை சுமார் 4 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் 12,500-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும், சுமார் 1,300 பேர் இடிபாடுகளில் புதையுண்டு மாயமாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி வரும் அதே வேளையில் ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் நகரங்கள் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காசாவுக்கு எகிப்து மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளபோதும், வான் தாக்குதல்களில் ரபா எல்லை சாலை மோசமாக சேதமடைந்துள்ளதால் நிவாரணப் பொருள்களுடன் 200 லாரிகள் எல்லையில் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story