புயல் சின்னத்தின் வேகம் குறைந்தது - வானிலை ஆய்வு... ... தமிழகத்தை மிரட்டும் புயல் சின்னம்
x
Daily Thanthi 2024-11-27 08:40:29.0
t-max-icont-min-icon

புயல் சின்னத்தின் வேகம் குறைந்தது - வானிலை ஆய்வு மையம் தகவல்


வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்கல் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் 13 கி.மீ-ல் இருந்து 10 கி.மீ.ஆக குறைந்துள்ளது.

இன்று மாலை உருவாக உள்ள பெங்கல் புயல் நாகைக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story