தமிழகத்தை நெருங்கும் புயல் சின்னம்இந்திய வானிலை... ... வங்கக்கடலில் இன்று உருவாகும் பெங்கல் புயல்
Daily Thanthi 2024-11-27 08:14:06.0
t-max-icont-min-icon

தமிழகத்தை நெருங்கும் புயல் சின்னம்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு:

கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கில் 530 கி.மீ. தொலைவில் மையம்கொண்டுள்ளது.

திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 110 கி.மீ., நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கில் 350 கி.மீ, புதுச்சேரிக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவில் உள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து பின்னர் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story