திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வீட்டிற்குள் புகுந்த... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x
Daily Thanthi 2024-12-01 12:08:37.0
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வீட்டிற்குள் புகுந்த வெள்ளநீர்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வேங்கி கால் ஏரி நிரம்பி, உபரி நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் ஆட்சியர் குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. அதனை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதைபோல விழுப்புரத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாண்டியன் நகர், சர்வேயர் நகர், வில் நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.


Next Story