விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரங்களில்... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Daily Thanthi 2024-12-01 06:13:56.0
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரங்களில் பெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை முதலே மிதமான மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து புயல் கரையை கடந்த உடன் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழையால் சுமார் 45 சென்டிமீட்டருக்கு மேலாக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி மழை நீர் ஆனது தெருக்களில் பாய்ந்தது. மேலும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி வீணானது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story