பெஞ்சல் புயல் பாதிப்பு : மீட்பு பணியில் தேசிய... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x
Daily Thanthi 2024-12-01 04:50:19.0
t-max-icont-min-icon

பெஞ்சல் புயல் பாதிப்பு : மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை

புதுச்சேரி அருகே நேற்று இரவு கரையைக் கடந்த பெஞ்சல் புயல். மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரியில் 47 செ.மீ மழை பதிவானது. விழுப்புரம் மாவட்டம் மைலத்தில் 49.8 செ.மீ. மழையும், கடலூரில் 18 செ.மீ, மழையும், மரக்காணத்தில் 23.8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

பெஞ்சல் புயல் காரணமாக கடலூரில் விடிய விடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பலத்த காற்று வீசியதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து, பாதுகாப்பு தடுப்புகள் சரிந்து விழுந்துள்ளன. இரவு முழுவதும் கனமழை பெய்த காரணத்தால் புதுச்சேரி த‌த்தளிக்க தொடங்கி உள்ளது. புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த‌தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளம் தேங்கி உள்ள பகுதிகள் வசிக்கும் பொதுமக்களை படகுகள் மூலம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

இதனிடையே பெஞ்சல் புயலால் கடுமையாக பதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முகாம்களாக மாற்றப்பட்டு வருகிறது. 

முன்னதாக புயலை எதிர்கொள்ளும்வகையில் அரசு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் தங்குவதற்கு வசதியாக நிவாரண முகாம்கள், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருந்து, மாத்திரைகள் போன்றவை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டிருந்தது. தண்ணீர் தேங்கினால் உடனுக்குடன் அப்புறப்படுத்தும் வகையில் மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.


Next Story