அருணாசலபிரதேசம்
60 சட்டசபை தொகுதிகளை கொண்ட அருணாசலபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பா.ஜ.க., காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட 10 பா.ஜ.க. வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.
இதனால், எஞ்சிய 50 தொகுதிகள் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கிம்
சிக்கிமில் 32 சட்ட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சி செய்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி உள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், பிற கட்சிகளும் களத்தில் உள்ளன.