முகாம் மாறும் ஆதரவாளர்கள் - அதிமுகவில் தொடரும் பரபரப்பு
ஒற்றை தலைமைக்கு எதிராக கொடிபிடித்த மேலும்சில மாவட்ட செயலாளர்களும் முகாம் மாறினர்
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக கருதப்படும் முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் நேற்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஒற்றை தலைமைக்கு ஆதரவு அளித்து வாழ்த்தினார்.
இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்ச்சர்கள் டி.கே.எம் சின்னயா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.
நேற்றுவரை ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த வேளச்சேரி மாவட்ட செயலாளர் அசோக் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.