பரபரக்கும் இலங்கை அதிபர் தேர்தல் களம்: முன்னணி... ... இலங்கை அதிபர் தேர்தலில் கடும் இழுபறி: வெற்றிபெறப்போவது யார்..?
x
Daily Thanthi 2024-09-22 05:33:59.0

பரபரக்கும் இலங்கை அதிபர் தேர்தல் களம்: முன்னணி நிலவரம்

இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகித்து வருகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரா குமார திசநாயகே முன்னணியில் உள்ளார்

தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அனுரா குமார திசநாயகேவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றிருந்த திசநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்த கட்டங்களில் படிப்படியாக குறைந்தது. இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரணில் விக்கிரமசிங்கே மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.

முன்னணி நிலவரம்:-

ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) - 7,01,820 வாக்குகள் (16.90 சதவீதம்)

அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) - 17,32,386 வாக்குகள் ( 41.71 சதவீதம்)

நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) - 1,01,999 வாக்குகள் ( 2.46 சதவீதம்)

சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) - 13,02,280 வாக்குகள் ( 31.35 சதவீதம்)

அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) - 1,74,316 வாக்குகள் ( 4.2 சதவீதம்)

திலகர் (தமிழ் வேட்பாளர்) - 760 வாக்குகள் ( 0.02 சதவீதம்)

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மை பகுதியில் சஜித் பிரேமதாசா அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் சஜித் பிரேமதாசாவுக்கும் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் அதிக வாக்குகள் விழுந்துள்ளன.


Next Story