நள்ளிரவைக் கடந்தும் குறையாத கூட்டம்.. விஜயகாந்த்... ... சந்தனப் பேழையில் வைத்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
x
Daily Thanthi 2023-12-28 22:14:59.0
t-max-icont-min-icon

நள்ளிரவைக் கடந்தும் குறையாத கூட்டம்.. விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு அங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகம் எடுத்து வரப்பட்டு இறுதி சடங்குகளோடு மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி இன்று விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவைக் கடந்தும் மக்கள் கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது. விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள், தே.மு.தி.க தொண்டர்கள் என ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் உடலைப் பார்த்து கதறி அழுத பெண்களை, பிரேமலதா விஜயகாந்த கட்டியணைத்து தேற்றினார்.


Next Story