சிங்கப்பூர் அதிபர் ஜனவரி மாதம் ஒடிசா வருகிறார் ... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..
Daily Thanthi 2024-12-10 11:00:33.0
t-max-icont-min-icon

சிங்கப்பூர் அதிபர் ஜனவரி மாதம் ஒடிசா வருகிறார்

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், ஜனவரி மாதம் ஒடிசாவுக்கு வருகை தர உள்ளார். இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங், ஒடிசா தலைமைச் செயலகத்தில் இன்று முதல்-மந்திரி மோகன் சரண் மாஜியை சந்தித்தபோது இந்த தகவலை உறுதி செய்தார்.

ஒடிசாவில் நடைபெறும் மாநில முதலீட்டாளர் உச்சிமாநாட்டின் (மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 2025) முதல் வெளிநாட்டு பங்குதாரராக சிங்கப்பூர் இணைந்துள்ளது.

இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரங்களில் சிங்கப்பூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story