3-வது முறையாக நாங்கள் ஆட்சியமைக்கும்போது, உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்- பிரதமர் மோடி


3-வது முறையாக நாங்கள் ஆட்சியமைக்கும்போது, உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்- பிரதமர் மோடி
Daily Thanthi 2023-08-10 12:31:25.0
t-max-icont-min-icon

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-

தங்களின் தேவையை யார் நிறைவேற்றுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.

கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் என்னை மிக மோசமாக விமர்சித்தார்கள். விமர்சனம் செய்வதில் மிக கீழ் தரமான நிலையை எதிர்க்கட்சிகள் எட்டியுள்ளன;எதிர்க்கட்சிகளின் வசை மொழிகளை, வாழ்த்துகளாக எடுத்துக் கொள்கிறேன்.

எல்ஐசி குறித்தும் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தார்கள், ஆனால் தற்போது எல்ஐசி சிறப்பாக இயங்குகிறது.

சிலர் இந்தியாவை மீண்டும் பாதாளத்தில் தள்ள முயற்சிக்கின்றனர்.மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததால் தான், எங்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்தார்கள்;

அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை நாங்கள் மேலே கொண்டு வந்துள்ளோம்.ஊழலற்ற இந்தியாவை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

3வது முறையாக நாங்கள் ஆட்சியமைக்கும்போது, உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்.

2028 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் எங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது இந்தியா பொருளாதாரத்தில் 3-வது இடத்தில் இருக்கும்.


Next Story