ஜம்மு காஷ்மீரில் வாக்களித்த பிறகு முன்னாள் முதல்... ... 4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 63.04 சதவீத வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2024-05-13 04:05:01.0
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் வாக்களித்த பிறகு முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்குமே வன்முறை இல்லை. அமைதி நிலவுகிறது என சொல்லிக்கொள்ளும் பாஜக அரசு, எங்கள் கட்சியினரை கடந்த 2 நாட்களை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. எங்கள் கட்சி நிர்வாகிகளை வெளியில் விடாமல் பிடித்து வைத்து இருப்பது ஏன் என மோடியிடமும் அமித்ஷாவிடமும் கேட்க நான் விரும்புகிறேன். தோல்வி அடைந்துவிடுவோம் என பாஜக பயப்படுகிறது. உண்மையில் அந்தக் கட்சி தோற்கத்தான் போகிறது’ என்று கூறினார். 


Next Story