விஜயகாந்த் உடல், சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில்... ... கண்ணீர் கடலில் தமிழகம்... பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்...லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-12-28 08:20:31.0
t-max-icont-min-icon

விஜயகாந்த் உடல், சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. விஜயகாந்த் உடலை ஏற்றி வந்த வாகனம், சுமார் 2 மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் மெல்ல ஊர்ந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகம் வந்தடைந்தது. வழிநெடுக சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவருகின்றனர். 


Next Story