ஹாங்சோவ்,  19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின்... ... லைவ் அப்டேட்ஸ்; குதிரையேற்றத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம்..!
Daily Thanthi 2023-09-27 01:41:15.0
t-max-icont-min-icon

ஹாங்சோவ்,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், குதிரையேற்றத்தில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.

ஆசிய விளையாட்டு போட்டியின் 4-வது நாளான நேற்று நடந்த குதிரையேற்றம் போட்டியில், 'டிரஸ்சேஜ்' அணிகள் பிரிவில் அனுஷ் அகர்வாலா, ஹிரிடாய் விபுல் செடா, திவ்யாகீர்த்தி சிங், சுதிப்தி ஹஜெலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 209.205 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தது. வீரர், வீராங்கனைகள் குதிரையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அதனை மைதானத்தில் துல்லியமாக அசைந்தும், நளினமாக நடைபோட வைத்தும் அபாரமாக செயல்பட்டதால் இந்தியாவுக்கு இந்த தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்றத்தில் 3 தங்கம் வென்ற இந்தியா அதன் பிறகு குதிரையேற்றத்தில் தங்கப்பதக்கம் வெல்வது இது முதல்முறையாகும். 41 ஆண்டுக்கு பிறகு இந்தியா மீண்டும் அசத்தி இருக்கிறது. சீனா (204.882 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், ஹாங்காங் (204.852 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றன.


Next Story