அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்: தற்போதைய... ... அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாகிறார் டொனால்டு டிரம்ப்
x
Daily Thanthi 2024-11-06 03:47:35.0
t-max-icont-min-icon

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்: தற்போதைய முன்னணி நிலவரம்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் மாகாணங்களாக கருதப்படும் பென்சில்வேனியா, நெவாடா, மிஷிகன், விஸ்கான்சின் உள்ளிட்ட மாகாணங்களில் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே வாக்கு எண்ணிக்கை இருந்து வருகிறது

கமலா ஹாரிசின் ஜனநாயக கட்சி வலுவாக உள்ள கலிபோர்னியா,வாஷிங்டன், ஹவாய் உள்ளிட்ட மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது

குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 210 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை (22 மாகாணங்களில் வெற்றி) - ( 52.5 சதவீதம் வாக்குகள்)

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 113 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார் (11 மாகாணங்களில் வெற்றி) - ( 46.3 சதவீதம் வாக்குகள்)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை.


Next Story