ஜியோ உலக மாநாட்டு மையத்தில் குளோபல் பின்டெக்... ... சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: மன்னிப்புக்கேட்ட பிரதமர் மோடி
x
Daily Thanthi 2024-08-30 07:49:44.0
t-max-icont-min-icon

ஜியோ உலக மாநாட்டு மையத்தில் குளோபல் பின்டெக் பெஸ்ட் -2024 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியாவில் பின்டெக் புரட்சியானது நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதோடு, புதுமையையும் மேம்படுத்துகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவில் எப்படி வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளோம் என்பதையும் நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள்.

விமான நிலையத்தில் வந்து இறங்குவதிலிருந்து சாலையோரக் கடைகளில் உணவு பொருட்களை ருசிப்பது வரை இந்தியாவின் நிதியியல் தொழில்நுட்ப புரட்சியை எல்லா இடங்களிலும் காணலாம்.

முன்பெல்லாம் நாட்டில் போதிய அளவில் வங்கிக் கிளைகள் இல்லை என்றும், கிராமப்புறங்களில் இணைய சேவை கிடைப்பது இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியதை நினைவுகூர்ந்த அவர்,

நிதி தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக 6 கோடியாக இருந்த பிராட்பேண்ட் பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது 94 கோடியாக அதிகரித்திருத்துள்ளது.


Next Story