பிரதமர் மோடியின் பயண விவரம்:-  செனையில் இருந்து... ... ராமநாத சுவாமி  கோவிலில் தரிசனம் முடித்து விட்டு  ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார் பிரதமர் மோடி
Daily Thanthi 2024-01-20 04:01:27.0
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் பயண விவரம்:-

செனையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி காலை 10.20 மணிக்கு திருச்சி சென்றடைகிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 10.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு செல்கிறார்.

சாமி தரிசனம்

பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலம் காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு ரெங்கநாதரை தரிசிக்கும் பிரதமர், கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்துகிறார். பின்னர் அங்குள்ள மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாடுகிறார்கள். அதை மோடி கேட்கிறார். அதனுடன் அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

பின்னர் பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, பின்னர் தனி விமானம் மூலம் அவர் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். 


Next Story