நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி


நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
x
Daily Thanthi 2023-08-10 14:12:25.0
t-max-icont-min-icon

மக்களவையில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல்வாக்கெடுப்பு நடத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து விட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனையடுத்து மோடி அரசுக்கு  எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு செய்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story