வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனர்களை... ... லைவ்:  - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
x
Daily Thanthi 2023-10-14 05:37:38.0
t-max-icont-min-icon

வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனர்களை தடுக்க ஹமாஸ் முயற்சி - இஸ்ரேல் குற்றச்சாட்டு

வடக்கு காசாவில் இருந்து மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேறும்படி இஸ்ரேல் நேற்று கெடு விதித்தது. இதன் மூலம் காசா முனை மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராவதாக தகவல் வெளியானது. இஸ்ரேலின் எச்சரிக்கையையடுத்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனர்களை தடுக்க ஹமாஸ் முயற்சிப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. எங்கள் நோக்கங்களை முன்கூட்டியே தெரிவித்துவிட்டோம், ஏனென்றால் போரால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. பொதுமக்கள் எங்கள் எதிரியல்ல. பொதுமக்களை கொல்லவோ, காயப்படுத்தவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. நாங்கள் ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக சண்டையிடுகிறோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 


Next Story