தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்- பிரதமர்... ... கண்ணீர் கடலில் தமிழகம்... பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்...லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-12-28 05:04:29.0
t-max-icont-min-icon

தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்- பிரதமர் மோடி இரங்கல்

விஜயகாந்த் தன்னை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘விஜய்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பினால் கோடிக்கணக்கான இதயங்களைக் கவர்ந்தவர். ஒரு அரசியல் தலைவராக, தமிழக அரசியல் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினம்.

எனக்கு அவர் நெருங்கிய நண்பராக இருந்தார். பல ஆண்டுகளாக அவருடனான தொடர்புகளை நான் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு எனது ஆறுதலை தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி’ என பிரதமர் தெரிவித்துள்ளார்.


Next Story