இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் தேதி திடீரென... ... 15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!
Daily Thanthi 2023-10-21 01:19:31.0
t-max-icont-min-icon

இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் தேதி திடீரென ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதோடு இஸ்ரேலுக்குள் தரைவழியாகவும் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்ட ஹமாஸ் இயக்கத்தினர் சுமார் 200 பேரை  பிணை கைதிகளாகவும் பிடித்து சென்றனர்.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே  வெடித்துள்ள தற்போதைய போருக்கு ஹமாசின் இந்த நடவடிக்கையே காரணமாக அமைந்தது. ஹமாஸ் அமைப்பினரின் வசம் இருக்கும் காசா மீது உக்கிரமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான இந்த போர் 15-வது நாளாக நீடிக்கிறது. போரால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது.

இதனிடையே, இஸ்ரேலில் இருந்து பிடித்து சென்ற பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த 2 பிணை கைதிகளை விடுவித்து இருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.


Next Story