விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான்... ... நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்-3 லேண்டர்..! சாதித்தது இந்தியா..!
x
Daily Thanthi 2023-08-23 18:20:43.0
t-max-icont-min-icon

விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவரை தரையிறக்கும் பணி தொடக்கம்

நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கும் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. லேண்டரில் இருந்து மெல்ல தரையிறங்கும் பிரக்யான் ரோவர், முதலில் தன்னை சுமந்த விக்ரமை படமெடுக்க உள்ளது. முன்னதாக விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது, நிலவில் புழுதி படலம் ஏற்பட்டது. அது அடங்கிய பின்னர், லேண்டரில் இருந்து ரோவர் வெளிவந்து ஆய்வு பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story