திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி:பிரதமர்... ... ராமநாத சுவாமி  கோவிலில் தரிசனம் முடித்து விட்டு  ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார் பிரதமர் மோடி
Daily Thanthi 2024-01-20 03:50:30.0
t-max-icont-min-icon

திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி:

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி நேற்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கினார்.

இந்நிலையில், பயணத்தின் 2வது நாளான இன்று பிரதமர் மோடி திருச்சி செல்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்ற அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். 


Next Story