ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார்,... ... மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் ஆட்சியை பிடித்தது பாஜக...!
Daily Thanthi 2023-12-03 02:09:09.0
t-max-icont-min-icon

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக பலகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் மிசோரம் தவிர எஞ்சிய 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மிசோரத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ராஜஸ்தான்:

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 100 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது பாஜக வெற்றிபெற்று புதிய ஆட்சி அமையுமா? என்பது இன்று தெரியவரும்.

மத்தியபிரதேசம்:

230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேசத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மத்திபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 116 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் மத்தியபிரதேசத்தில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது காங்கிரஸ் வெற்றிபெற்று புதிய ஆட்சி அமையுமா? என்பது இன்று தெரியவரும்.

சத்தீஷ்கார்:

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்காரில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. சத்தீஷ்காரில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் சத்தீஷ்காரில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது பாஜக வெற்றிபெற்று புதிய ஆட்சி அமையுமா? என்பது இன்று தெரியவரும்.

தெலுங்கானா:

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவிற்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது பாஜக அல்லது காங்கிரஸ் வெற்றிபெற்று புதிய ஆட்சி அமையுமா? என்பது இன்று தெரியவரும்.


Next Story