A Glorious Gold 🥇by the 🇮🇳 #Squash men
Daily Thanthi 2023-09-30 10:45:26.0
t-max-icont-min-icon

ஆசிய விளையாட்டு தொடரின் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கம் வென்று இருந்தது. இந்த நிலையில், இன்று ஸ்குவாஷ் ஆடவர் பிரிவு ஆட்டத்தின் இறுதிப்போட்டி நடைபெற்றது. .இதில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. ஸ்குவாஷ் போட்டியில் ஆசியாவின் பலம் வாய்ந்த அணிகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் விளங்கி வருகின்றன.

இதனால், இன்று நடைபெற்ற போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மிகுந்த பரபரப்புடன் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவுக்காக முதலில் களம் இறங்கிய மகேஷ் மன்கோனகர் ஒரு செட்டில் கூட வெற்றி பெறாமல் 0-3என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். எனவே, அடுத்து வந்த இரண்டு வீரர்களுக்கும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சவாலான கட்டத்தில் களம் இறங்கிய இந்தியாவின் அனுபவம் வாய்ந்த வீரர் சவுரவ் கோஷல், பாகிஸ்தான் வீரரை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். அதன்பிறகு களம் இறங்கிய அபய் சிங், முதல் செட்டில் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து இரண்டு செட்களிலும் தோல்வி அடைந்தார். இதனால், இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், கடைசி இரண்டு செட்களிலும் அபய் சிங் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக கடைசி செட் 10-10 என்று இருந்த போதும் அபய் சிங் விடா முயற்சியுடன் போராடி இந்தியாவுக்கு தங்க பதக்கத்தை பெற்று கொடுத்தார். இதனால், இந்திய அணி 2-1 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்க பதக்கத்தை கைப்பற்றியது.


Next Story