வாக்குப்பதிவு தொடக்கம்:  288 தொகுதிகளை கொண்ட... ... சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரம்.. மராட்டியம்-58.22, ஜார்கண்ட்-67.59 சதவீத வாக்குப்பதிவு
Daily Thanthi 2024-11-20 01:44:22.0
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு தொடக்கம்:

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல ஜார்கண்ட் சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

வாக்குப்பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேவையான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.


Next Story