மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பாஜக... ... மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் ஆட்சியை பிடித்தது பாஜக...!
Daily Thanthi 2023-12-03 06:08:02.0
t-max-icont-min-icon

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பாஜக முன்னிலை...!

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பாஜக முன்னிலையில் உள்ளது. அதேவேளை, தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

மத்தியபிரதேசம்:

மொத்த தொகுதி - 230 பெரும்பான்மை - 116

முன்னிலை:

காங்கிரஸ் - 73

பாஜக - 154

பகுஜன் சமாஜ் - 3

மற்றவை - 0

மத்தியபிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.

ராஜஸ்தான்:

மொத்த தொகுதி - 199 பெரும்பான்மை - 100

முன்னிலை:

காங்கிரஸ் - 67

பாஜக - 111

பகுஜன் சமாஜ் - 2

மற்றவை - 19

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது. இதன் மூலம் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

சத்தீஷ்கார்:

மொத்த தொகுதி - 90 பெரும்பான்மை - 46

முன்னிலை:

காங்கிரஸ் - 42

பாஜக - 47

பகுஜன் சமாஜ் - 0

மற்றவை - 1

சத்தீஷ்காரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ளது. அதேவேளை, சத்தீஷ்காரில் தொடர்ந்து இழுபறி சூழ்நிலையே நிலவி வருகிறது.

தெலுங்கானா:

மொத்த தொகுதி - 119 பெரும்பான்மை - 60

முன்னிலை:

காங்கிரஸ் - 69

பாஜக - 9

பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) - 37

ஏஐஎம்ஐஎம் - 4

மற்றவை - 0

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில் தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ். ஆட்சியை இழக்கிறது. இதன் மூலம் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.  


Next Story