மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்  8... ... நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2024-05-20 12:37:59.0

மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:

பீகார் - 52.35%

ஜம்மு-காஷ்மீர் - 54.21%

ஜார்க்கண்ட் - 61.90%

லடாக் - 67.15%

மராட்டியம் - 48.66%

ஒடிசா - 60.55%

மேற்குவங்காளம் - 73.02%

உத்தர பிரதேசம் - 55.80%


Next Story