மதியம் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
பீகார் - 34.62%
ஜம்மு-காஷ்மீர் - 34.79%
ஜார்க்கண்ட் - 41.89%
லடாக் - 52.02%
மராட்டியம் - 27.78%
ஒடிசா - 35.31%
மேற்குவங்காளம் - 48.41%
உத்தர பிரதேசம் - 48.41%
Related Tags :
Next Story