மத்திய பிரதேசம்: பால் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில்... ... 21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-21 05:49:02.0
t-max-icont-min-icon

மத்திய பிரதேசம்: பால் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் நயாபுராவில் பால் கடையாக செயல்பட்டு வந்த வளாகத்தின் 2வது மாடியில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளனர். இன்று அதிகாலை 4.45 மணியளவில் எதிர்பாராத விதமாக அந்த வளாகத்தில் உள்ள பால் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வளாகத்தின் 2வது மாடியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.


Next Story